நேற்று (02.12.2015 ) ‘நவீன இஸ்லாமிய சிந்தனையும் , மகாஸிது ஷரீஆவும்’ என்ற தலைப்பில் மாலை அமர்வொன்று இஸ்லாஹிய்யா வாசிகசாலை விரிவுரைகள் மண்டபத்தில் இடம்பெற்றன. இக்குறித்த நிகழ்வில் ‘மகாஸிது ஷரீஆ – தலீலுன் லில் முப்ததஈன்’ என்ற பேராசிரியர் ஜாஸிர் அவ்தாவினுடைய நூலினை மையப்படுத்திய கலந்துரையாடல்களே இடம்பெற்றன. இந்நிகழ்ச்சியில் முதல் அம்சமாக மூன்றாம் வருட மாணவர்களான அஸ்மான் கான் , சகோ. சுஜீத் மற்றும் சகோ சாஜீத் போன்றவர்கள் நூல் பற்றிய தமது அவதானங்களை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, நவீன இஸ்லாமிய சிந்தனையை வடிவமைப்பதில் மகாஸித் சிந்தனையின் வகிபாகம் தொடர்பான உஸ்தாத் ஸகி பவ்ஸ் , உஸ்தாத் இப்திஹார், உஸ்தாத் அஸ்ஹர் மற்றும் உஸ்தாத் ரிஸ்மி போன்றவர்கள தமது கருத்துக்களை முன்வைத்தனர். இன்னும், மகாஸிது ஷரீஆ துறையில் ஈடுபாடு காட்டும் ஏனைய இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பற்றிய அறிமுகமும் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும். இறுதியாக, மகாஸிது ஷரீஆ தொடர்பான கேள்வி பதில் அமர்வொன்றும் இடம்பெற்றமை நோக்கத்தக்கது. இக்குறித்த மாலை அமர்வு இஸ்லாமிய சிந்தனையை கற்பதன் அவசியத்தையும், மாணவர்களது வாசிப்பு ஆர்வத்தையும் அதிகரித்திருக்கும் என ஏற்பாட்டுக் குழு ஆழமாக நம்புகிறது. இன்னும், இஸ்லாஹிய்யாவின் இறுதி வருட மாணவர்களுடைய பாடத்திட்டத்திலும் ‘மகாஸிது ஷரீஆ’ ஒரு தனிப் அலகாக கற்பிக்கப்படுவதனால் , அக்குறித்த அலகினை கற்பதற்கான பீடிகையாகவும் இந்நிகழ்ச்சி அமைந்திருக்கும் என்பது மற்றோர் சிறப்பம்சமாகும்.